SHOULD WE PARTICIPATE IN JAN 2010 SRI LANKA PRESIDENTIAL ELECTION ?

Tuesday, December 22, 2009

HELP YOUR PEOPLE BACK HOME IN MEANIGFUL WAYS

இப்பொழுது இலங்கைத் தமிழருக்கு உடனடியாகத் தேவைப்படுவது என்ன? ஒற்றுமையாக ஒரு தலைமையை தேர்ந்து எடுப்பது முதலில் செய்யப்படவேண்டும். தந்தை செல்வா போன்ற தன்னலமற்ற ஒரு தலைவன் உடனடியாகத் தேவை. தம்பியின் உயிர் தியாகம் தமிழனை ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. அடுத்த கட்டம் இலங்கையின் வட கிழக்கிலேயே அரங்கேற வேண்டும். கனடா, பிரான்ஸ் வாழும் தமிழர்கள், இலங்கையில் வாழும் தமிழருக்கு இந்த முயற்சி கைகூட உதவி செய்வது இந்தக்கட்டத்தில் அவசியமாகும்.


சிங்களத்தலைவர்களை நீதியின் முன் நிறுத்துவது எந்த அளவு கைகூடும் என்பதை யதார்த்த பூர்வமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 30,000 தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்த பொழுது பார்த்துக்கொண்டு இருந்த சர்வதேச சமூகமா இப்போது இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறது? நன்கு சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே.

ஆனந்தகிருஷ்ணன், ராஜரட்ணம், நவி பிள்ளை போன்ற திறமை வாய்ந்த தொலை நோக்கு கொண்டவர்கள் நம் மத்தியில் உருவாக வேண்டும். திறமை கொண்ட இளைஞர்களுக்கு வசதி படைத்தவர்கள் கைகொடுக்க வேண்டும். அதை விடுத்து ஊர்வலம் நடத்துவதும், தேர்தல் வைப்பதும் இப்போது முக்கியம் இல்லை. இலங்கைத் தமிழன் பொருளாதாரத்தில் முன்னே நிற்கும் போது இந்தியா கூட யோசிக்கும் நிலைமை உருவகும். உலக மேடையில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை நோக்கி தைரியமாக நடை போட வேண்டும்